| ADDED : மே 02, 2024 07:24 PM
அறிவியல் ஆயிரம்மின்னல் வேக விண்கல்சமீபத்தில் (2024 ஜன. 21ல்) '2024 பி.எக்ஸ்1' விண்கல், பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து, ஜெர்மனியின் பெர்லின் நகரில் நொறுங்கி விழுந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதிலிருந்து சில துகள்களையும் சேகரித்தனர். பூமியில் மோதுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான் இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முறை (2.588 விநாடிக்கு ஒருமுறை) சுற்றியது. வேகமாக சுற்றும் விண்கல் இதுதான். இதற்கு இந்த விண்கல் அளவில் சிறியதாக (அகலம் 3 அடி) இருப்பதே காரணம். இதன் வேகம் மணிக்கு 50 ஆயிரம் கி.மீ.தகவல் சுரங்கம்பத்திரிகை சுதந்திர தினம்உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான் உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1993 முதல் மே 3ல் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்து காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனத்துக்கு 'யுனெஸ்கோ' சார்பில் விருது வழங்கப்படுகிறது.