| ADDED : பிப் 21, 2024 06:37 PM
அறிவியல் ஆயிரம்மூக்கில் நீர் வர காரணம்கண்களில் இயல்பான நேரத்தில் சுரக்கும் கண்ணீர், இமை விளிம்புகளில் உள்ள நுண்துளைகளின் வழியே கண்ணைவிட்டு நீங்கி, கண் - மூக்கு இடையில் உள்ள கண்ணீர்ப் பையை அடைந்து , அங்கிருந்து தனிக்குழல் வழியாக மூக்கின் மேல் பகுதியில் சென்று வடிகிறது. இயல்பான நிலையில் அளவான நீரே சுரக்கப்படுவதால், அது மூக்குகுழியை அடைவதற்குள் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. ஆனால் அழும்போது அதிகமான அளவு கண்ணீர் ஏற்படுவதால், தேவை போக அதிகமான நீர் மூக்கிலிருந்து வழிகிறது. இதுவே நாம் கண்ணீர்விட்டு அழும்போது மூக்கில் தண்ணீர் வரக் காரணமாகிறது.தகவல் சுரங்கம்சாரணர் தினம்உலக சாரணத் தந்தை என அழைக்கப்படும் பிரிட்டனின் பேடன் பவுல் 1857 பிப். 22ல் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்தார். 1876ல் ராணுவத்தில் சேர்ந்தார். 1907ல் 20 மாணவர்களுடன் சாரண இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின் இது உலகம் முழுவதும் பரவியது. நாட்டுப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை உள்ளிட்ட பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். சாரணர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஸ்கவுட் மாஸ்டர்கள், ஆசிரியைகள் “கைடு கேப்டன்கள்' என அழைக்கப்படுகின்றனர்.