அறிவியல் ஆயிரம் : முடியை விட சிறிய வயலின்
அறிவியல் ஆயிரம்முடியை விட சிறிய வயலின்உலகின் சிறிய வயலின் இசைக்கருவியை இங்கிலாந்தின் லப்பரோ பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது மனித முடியின் தடிமனை விட சிறியது. இதன் நீளம் 35 மைக்ரான். அகலம் 13 மைக்ரான். ஒரு மைக்ரான் அல்லது மைக்ரோமீட்டர் என்பது 10 லட்சம் மீட்டரில் ஒன்று. மனித முடியின் அகலம் 17 - 180 மைக்ரான் இருக்கும். ஆனால் இந்த வயலினில் வாசிக்க முடியாது. தொழில்நுட்பம் எந்தளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.