அறிவியல் ஆயிரம்: கார்பனை குறைக்கும் இயந்திரம்
அறிவியல் ஆயிரம்கார்பனை குறைக்கும் இயந்திரம்பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு உள்ளது. இதை குறைக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. கார்பன் வாயுவை உள்ளிழுக்கும் பெரிய இயந்திரம் 2024ல் ஐஸ்லாந்தில் நிறுவப்பட்டது. இது ஆண்டுக்கு 36 ஆயிரம் டன் கார்பனை ஈர்த்துள்ளது. இது பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தப்படுகிறது. இது 8000 கார்கள் வெளியிடும் கார்பனுக்கு சமம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு இது நிரந்தர தீர்வல்ல எனவும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.