அறிவியல் ஆயிரம் : விண்வெளி ஆய்வில் பொன்விழா
அறிவியல் ஆயிரம்விண்வெளி ஆய்வில் பொன்விழாஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (இ.எஸ்.ஏ.,) பொன்விழா கண்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 23 ஐரோப்பிய நாடுகள் இணைந்து 1962ல் ராக்கெட் தயாரிக்க ஐரோப்பிய வளர்ச்சி கழகம், விண்கலம் தயாரிக்க ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தொடங்கின. பின் இரண்டையும் இணைத்து 1975 மே 30ல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தொடங்கப்பட்டது. தலைமையகம் பிரான்சின் பாரிஸ். 2547 பேர் பணியாற்றுகின்றனர். பல்வேறு செயற்கைக்கோள், விண்கலங்களை விண்ணில் செலுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலும் இதன் பங்களிப்பு உள்ளது.