மேலும் செய்திகள்
கண்களை கூசச்செய்யும் வாகன விளக்குகள்
28-Dec-2025
மின்மினி ஒளிர்வது எப்படிஇரவில் ஒளி வீசியவாறு செல்லும் மின்மினி பூச்சிகள் நம்மை கவரும். இணையை தேடுதல், தற்காப்பு, இரை தேடுதலுக்காக இவ்வாறு ஒளியை வெளிப்படுத்துகிறது. இதன் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. சாதாரண விளக்குகளில் வெப்பம் இருக்கும். ஆனால் இதன் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது. இதன் உடலிலுள்ள 'லுாசிபெரின்' என்ற பொருள் 'லுாசிபெரேஸ்' என்ற என்சைமுடன் இணைந்து வேதிவினை புரிவதால் ஒளி உருவாகிறது. குளிர்காலத்தில் மண்ணுக்கு அடியில் பதுங்கும். இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.
28-Dec-2025