உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் நவ 20

அறிவியல் ஆயிரம் நவ 20

மறைந்து விட்ட எண்ணெய் ஒரு காலத்தில் தமிழகத்தில் தீபாவளியின் போது கடலை எண்ணெய் விற்பனை அதிகம் இருக்கும். பர்மாவில் கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கடலுாரைச் சேர்ந்த 'கோவிந்த அய்யர்' என்பவர் தான் முதன்முதலில் சமையலில் கடலை எண்ணெய் பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அதனால் தான் இன்று வரை நிலக்கடலை உற்பத்தியில் கடலுார் மாவட்டம் முன்னணியில் உள்ளது. கடலை எண்ணெய்யின் கொதிநிலை அதிகம் என்பதால் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவு. ‘ஒமேகா-6' கடலை எண்ணெய்யில் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய்யின் வரவால் கடலை எண்ணெய் மறைந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ