அறிவியல் ஆயிரம் : ஆழ்கடலிலும் பிளாஸ்டிக்
அறிவியல் ஆயிரம்ஆழ் கடலிலும் பிளாஸ்டிக்பூமியில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் நுண் துகள்கள் சென்றடைந்து விட்டன. கடலில் 2500 அடி ஆழத்தில் வாழும் நத்தைகள், சிப்பிகள் உள்ளிட்ட உயிரினங்களிடம் தென்கொரிய உயிரி அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் 92 சதவீத உயிரினங்களிடம் பிளாஸ்டிக் நுண்துகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அளவு என்பது தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள வடக்கு பிஜி படுகையை விட, இந்திய பெருங்கடலில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் முகட்டில் 14.7 மடங்கு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.