அறிவியல் ஆயிரம் : பிளாஸ்டிக் டூ ஹைட்ரஜன்
அறிவியல் ஆயிரம்பிளாஸ்டிக் டூ ஹைட்ரஜன்உலகில் ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக்கில், 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. 79 சதவீதம் நிலம், நீர்பகுதியில் சேர்ந்து சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மற்ற 12 சதவீதம் எரிக்கப்படுவதால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கிறது. இந்நிலையில் பரவலாக பயன்படுத்தப்படும் மூன்று வகை பிளாஸ்டிக்குகளின் கலவையை, நேரடியாக உயர் துாய்மை கொண்ட ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றும் செயல்முறையை தென்கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஹைட்ரஜன் எரிபொருள், கார்பன் வெளியீட்டை தடுக்கிறது.