உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் உயரமான எரிமலை

அறிவியல் ஆயிரம் : செவ்வாயில் உயரமான எரிமலை

அறிவியல் ஆயிரம்செவ்வாயில் உயரமான எரிமலைசெவ்வாய் கோளில் உள்ள 'அர்சியா மான்ஸ்' என்ற உயரமான எரிமலையை விஞ்ஞானிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். 2001ல் அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'மார்ஸ் ஒடிசிய் ஆர்பிட்டர்' கடந்த மே 2ல், தெர்மல் எமிசன் இமேஜிங் சிஸ்டம் தொழில்நுட்பம் மூலம் இந்த புகைப் படத்தை எடுத்துள்ளது. இதன் உயரம் 20 கி.மீ. அகலம் 120 கி.மீ. இது பூமியின் உயரமான எரிமலையான ஹவாய் தீவிலுள்ள 'மவுனா லாவ்' எரிமலையை (9 கி.மீ.,) விட இரண்டு மடங்கு உயரமானது. மேலும் 'அர்சிய மான்ஸ்' பகுதியில் மேகத்தின் தடிமன், பூமியில் மவுனா லாவ் பகுதி மேகத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை