அறிவியல் ஆயிரம் : சூரிய குடும்பத்துக்கு வெளியே தண்ணீர்
அறிவியல் ஆயிரம்சூரிய குடும்பத்துக்கு வெளியே தண்ணீர்சூரிய குடும்பத்துக்கு வெளியே 'எச்.டி., 181327' நட்சத்திரத்தின் துாசி மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் பெரிய அளவில் இருப்பதை அமெரிக்காவின்'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.இந்த நட்சத்திரம், பூமியில் இருந்து 156 ஒளி ஆண்டுகள் (ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் துாரம்) தொலைவில் உள்ளது. இதற்கு முன், நாசாவின் 'ஸ்பிட்ஜர் டெலஸ்கோப்' 2008லேயே இதில் உறைந்த தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்திருந்தது.தற்போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் 2.30 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது.