வலுவடையும் எல் நினோ
துருவப்பகுதிகளுக்கு வெளியே உலகின் சராசரி கடல்நீர் மேற்பரப்பு வெப்பநிலை, 2026 ஜூலை மாதத்தில் 20.96 டிகிரி செல்சியஸ் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன் 2023ல் 20.89 டிகிரி செல்சியஸ் என இருந்ததே அதிகபட்சம். இது 'சூப்பர் எல் நினோ' வலுவடைந்து வருவதை காட்டுகிறது. இது வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என ஐரோப்பிய யூனியனின் கோபர்னிகஸ் ஆய்வு தெரிவித்துள்ளது. எல் நினோ காரணமாக கிழக்கு ஆப்ரிக்கா, மேற்கு வடக்கு அமெரிக்கா, மத்திய ஆசியாவில் அதிக வெள்ளமும், வட ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்திய துணைக்கண்டம் பகுதிகளில் வறட்சியும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.