மேலும் செய்திகள்
'தினமலர்' நமது பண்பாடு, கலாச்சாரத்தின் காவலன்
18-Oct-2025
தினமலர் பத்திரிகை தோன்றிய நாள் ஒரு வியாழக்கிழமை. நம் மரபில் வியாழக்கிழமை என்பது குருவின் நாள், அறிவின் நாள். இந்நாள் பிரகாசம், ஞானம் மற்றும் நெறிப்படுத்துதல் போன்றவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அப்படிதான், 'தினமலர்' கடந்த 75 ஆண்டுகளாக செய்தி சொல்லும் ஆசிரியராகவும், சமூகத்தை விழிப்புணர்வுடன் வழிநடத்தும் குருவாகவும் திகழ்ந்து வருகிறது.நான் அறிந்த வரை, விளம்பர வருவாயை பின்னுக்குத் தள்ளி, மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, செய்திகளை நேர்மையாகவும், துணிச்சலாகவும் வெளியிடும் ஒரே பத்திரிகை 'தினமலர்' தான். நான் கவனித்த ஒன்று, ஒரு புகைப்படத்தை வெளியிடும்போது, பிரபலமானவர், பிரபலம் அல்லாதவர் என்று பார்க்காமல் அதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் பெயர் மற்றும் அவர் யார் என்பதை முழுமையாக வெளியிடும் 'தினமலர்' பண்பு மிகவும் பாராட்டத்தக்கது.மனிதர்கள் கைவிடும்போது புத்தகங்கள் கைகொடுக்கும் என்பர். அப்படி கை கொடுக்கும் ஒரு தோழனாகவே, நான், வாரமலர் இணைப்பு இதழை பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன்.மிக முக்கியமாக, வாரமலர், சிறுவர் மலர் இணைப்புகளைத் தொடர்ந்து, கடந்த 2016 ஜனவரி 18ம் தேதி, மாணவர்கள் பதிப்பாக 'பட்டம்' என்ற பெயரில் தொடங்கியது. பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக இதழின் துவக்க விழா, முதன்முதலில் எங்கள் 'எவர்வின்' பள்ளியில் தான் நடைபெற்றது. இன்று, 'பட்டம்' இதழ் பொது அறிவு, கணிதம், மொழி தொடர்பான அரிய தகவல்களைத் தாங்கி, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பெரிய உந்துசக்தியாக விளங்குகிறது.வரும் 2050 செப்டம்பர் 6ம் தேதிக்காக காத்திருக்கிறேன். 'தினமலர்' நுாற்றாண்டு தொடக்கவிழா அன்று, எங்களைப் போன்ற கல்வியாளர்களையும் அந்த பெருமைமிகு தருணத்தில் இணைத்துக்கொள்ள காத்திருக்கிறேன்.'தினமலர்' தொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் தொடரட்டும். அதன் வாயிலாக இச்சமூகம் இன்னும் மேன்மை பெறட்டும்.அன்புடன்பா.புருஷோத்தமன் நிறுவனர், தாளாளர் மற்றும் மூத்த முதல்வர்எவர்வின் பள்ளிக் குழுமம், சென்னை
18-Oct-2025