வெறுக்கலாம், ஆனால் தவிர்க்க முடியாது
இதெல்லாம் ஒரு பத்திரிகையா? என்று தினமலரை பார்த்து கேட்டவர்கள் அன்று இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். அதை நினைத்து அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே வாரிசுகளுக்கும் வாசகர்களுக்கும் ஊழியர்களுக்கும் வகுப்பு எடுத்திருக்கிறார் நிறுவனர் ராமசுப்பையர். “தினமலர் ஆரம்பித்தபோது, அதை துச்சமாக மதித்து ஒதுங்கி சென்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்று காலையில் எழுந்ததும் முதலில் தேடி எடுத்து வாசிக்கிற பத்திரிகையாக தினமலர் மாறி இருக்கிறது என்றால், தமிழ் கூறும் நல்லுலகம் நம்முடைய நேர்மையையும் நாணயத்தையும் துணிச்சலையும் மனமார பாராட்டுகிறது என்று தான் அர்த்தம் என்று, தினமலர் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் பெருமிதம் பொங்க பேசினார் ராமசுப்பையர்.