மேலும் செய்திகள்
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு
24-Sep-2025
திருப்புவனம் : தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து திருப்புவனத்தில் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.திருப்புவனத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பிற்குள்ளாகினர்.திருப்புவனம் நரிக்குடி ரோட்டில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவில் சாக்கடை பணி, குழாய் பதிக்கும் பணி உள்ளிட்டவற்றால் வாகனப் போக்குவரத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது. தினமலரில் செய்தி வெளியானதை அடுத்து நேற்று போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேஷ்வரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் உரிமையாளர்களை வரவழைத்து எச்சரித்தனர். இனி ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தினால் அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். நெடுஞ்சாலைத்துறையிடம் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
26-Sep-2025
26-Sep-2025
24-Sep-2025