மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
கோவைl;உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவையில், 'தினமலர்' சார்பில், 'பசுமை சைக்கிளத்தான்', நாளை நடக்கிறது.'தினமலர்' நாளிதழுடன் இந்நிகழ்வை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மற்றும் நேரு கல்விக்குழுமம் இணைந்து நடத்துகிறது.கோவை மாநகர காவல் துறை ஒத்துழைப்புடன் நடத்தப்படும், 'பசுமை சைக்கிளத்தான்' பயணம் வரும், 9ம் தேதி (நாளை) நடக்கிறது.கோவை சுங்கம் பை-பாஸ் (வாலாங்குளம்) பகுதியில் காலை, 7:15 மணியளவில் துவங்கி 9:15 மணிக்கு, ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் முடிவடையும்.சூழல் காக்கும் இந்ந விழிப்புணர்வு நிகழ்வை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைக்கிறார். இதில், 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் சைக்கிளுடன் வந்து பங்கேற்கலாம். மரக்கன்று, டி-சர்ட் இலவசம்
இதில், முன்பதிவு செய்து பங்கேற்பவர்களுக்கு, இலவசமாக டி-சர்ட், பங்கேற்பு சான்றிதழ் மற்றும் போத்தீஸ் சார்பில், மரக்கன்று வழங்கப்படும்.ஆர்வமுள்ளவர்கள், 9566657024 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பெயர், முகவரி, தொடர்பு எண்ணை அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம்.மாணவர்கள், சைக்கிள் கிளப் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் அனைவரும், இதில் பங்கேற்க, 'தினமலர்' நாளிதழ் அன்போடு அழைக்கிறது.மாசற்ற சூழலை, நம் சந்ததிகளுக்கு விட்டுச்செல்ல, இணையட்டும் நம் கரங்கள்!
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025