உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / * தினமலர் செய்தி எதிரொலி - உடைந்த குடிநீர் பைப்லைன் சீரமைப்பு

* தினமலர் செய்தி எதிரொலி - உடைந்த குடிநீர் பைப்லைன் சீரமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் கிராமத்தில் இருந்து, மலையாங்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, அப்பகுதியை சேர்ந்தோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலையோரத்தில் காவாம்பயிர் செய்யாற்றில் இருந்து, மலையாங்குளம் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் பைப்லைன் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஆறு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வந்தது. அவ்வாறு வெளியேறும் குடிநீரானது சாலையிலே தேங்கி வந்ததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, கீழே விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். மேலும், சாலையில் தேங்கும் நீரால் குடிநீரில் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருந்தது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடைந்த குடிநீர் பைப்லைன் சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை