உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி: சுத்தமாகிறது பூங்கா பொதுமக்கள் வரவேற்பு

தினமலர் செய்தி எதிரொலி: சுத்தமாகிறது பூங்கா பொதுமக்கள் வரவேற்பு

திருப்பூர்;திருமுருகன்பூண்டி நகராட்சி, 3வது வார்டு, வி.ஜி.வி., கார்டன் பகுதியில், 350 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ரிசர்வ் சைட்டில், 20 லட்சம் ரூபாய் செலவில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், சிறுவர்கள் விளையாட உபகரணங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.இப்பூங்கா, கடந்த, 4 ஆண்டாக பராமரிப்பின்றி புதர்மண்டி கிடந்த நிலையில், பூங்காவை பராமரித்து, பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினரும், நகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, 'தினமலர்' திருப்பூரில் செய்தி வெளியானது. இதன் விளைவாக, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி, பூண்டி நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் நேற்று பூங்காவில் மண்டிக்கிடந்த புதரை அகற்றி, சுத்தப்படுத்தினர்.நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர், 'புதர்களை அகற்றும் பணியின் தொடர்ச்சியாக, சிதிலமடைந்துள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களை புதுப்பித்தல், நடைபாதை சுற்றுப்பாதை, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை பராமரித்து, புதுப்பிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை