மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சியில் பள்ளிக்குச் செல்லும் சாலை சேதமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அதனை சரி செய்யும் பணி நடந்தது.தி.சூரக்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சொக்கம்பட்டி, நங்கம்பட்டி பூவான்டிபட்டி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளிக்குச் செல்வதற்கு பைபாஸ் பகுதியை ஒட்டிய மண் சாலையை பயன்படுத்தி வந்தனர்.இந்த சாலையானது தொடர் மழை காரணமாக சேதமடைந்தது. மாணவர்கள், பொது மக்கள், சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சாலையின் நடுவே தண்ணீர் செல்வதற்கு குழாய் அமைத்து சாலையை செப்பனிடும் பணி நடந்தது.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025