மேலும் செய்திகள்
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு
24-Sep-2025
தேனி : போடியில் காலாவதியான தராசுகள் பயன் படுத்துவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முத்திரையிடாத 25 தராசுகள் பறிமுதல் செய்தனர்.போடி மார்க்கெட், சிலமலை வாரசந்தையில் முத்திரையிடாத தராசுகள் பயன்படுத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியாக கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தலில் மாவட்ட தொழிலாளர் அமலாக்கபிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழு போடியில் ஆய்வு மேற்கொண்டனர். முத்திரை இடாமலும், மறு முத்திரையிடாமலும் இருந்த 20 மின்னனு தராசுகள், 4 மேஜை தராசுகள் உட்பட 25 தராசுகள், 12 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய காலத்தில் தராசுகள் முத்திரையிடப்படாமல் இருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட தொழிலாளர் அமலாக்கபிரிவு உதவி ஆணையர் எச்சரித்தார்.
26-Sep-2025
26-Sep-2025
24-Sep-2025