உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் நாளிதழ் படம் எதிரொலி: தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்துங்க; கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தினமலர் நாளிதழ் படம் எதிரொலி: தடுப்பணை கட்டுமானத்தை நிறுத்துங்க; கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

உடுமலை: சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தும் படி கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. தினமலர் நாளிதழ் வெளியான படம் அடிப்படையில் உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்து உள்ளது.அமராவதி அணையின் முக்கிய நீராதாரத்தை தடுக்கும் விதமாக கேரளா அரசு தடுப்பணை கட்டி வருவது குறித்து நேரில் ஆய்வு செய்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், 'பாதிப்பில்லை' என, தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம்.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில், 946 சதுர கி.மீ., பரப்பளவு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது.வனப்பகுதிகளிலுள்ள காட்டாறுகள், ஓடைகள் என கேரளா மாநிலம் மூணாறு, தலையாறு பகுதியிலிருந்து பாம்பாறு; வால்பாறை கிழக்கு மலைப்பகுதிகளிலிருந்து சின்னாறு; கொடைக்கானல் மேற்கு மலைப்பகுதிகளில் இருந்து தேனாறு ஆகியவை முக்கிய நீர் வரத்து ஆறுகளாக உள்ளன.அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் பாம்பாற்றின் குறுக்கே, பட்டிச்சேரி பகுதியில் ஏற்கெனவே கேரளா தடுப்பணை கட்டி வருகிறது.இந்நிலையில் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகா, வட்டவடா பஞ்சாயத்து, பெருகுடா பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே மலைச்சரிவில், அமராவதி அணையின் நீர்வரத்தை தடுக்கும் வகையில் கேரளா அரசு மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்டி வருகிறது.சிலந்தை நீர் வீழ்ச்சி அருகே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் கம்பக்கல் மலைச்சரிவிலிருந்து, மஞ்சம்பட்டி வழியாக தேனாறுக்கு வரும் நீர் தடுக்கப்படுகிறது. இதனால், அமராவதி பாசன பகுதிகள் பாதிக்கும்.எனவே, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி அமராவதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.இதையடுத்து, அமராவதி பாசன கோட்ட அதிகாரிகள் குழு, கேரளா அரசு அணை கட்டும் பகுதியை நேரில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:விவசாயிகளை புகாரை தொடர்ந்து நேரில் ஆய்வு நடத்தப்பட்டது. வட்டவடா பஞ்சாயத்துக்குட்பட்ட ஆறு சிறிய கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவைக்காக மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியின் கீழ், கேரளா மாநில குடிநீர்த்துறை பங்களிப்புடன், ரூ.16 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதற்காக, ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி செலவில் 40 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் உயரத்தில், 0.3 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவுடன் தினமும், 1.20 கனஅடி நீர் எடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.தற்போது, 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அமராவதி அணையில் தினமும் நீர் இழப்பு, 15 கனஅடியாக உள்ள நிலையில், மிகவும் குறைந்த அளவே, நீர் எடுத்து குடிநீருக்கு பயன்படுத்தப்பட உள்ளது.இதனால், அமராவதி அணை நீர் வரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. இது குறித்து விரிவான அறிக்கை தயார் செய்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

தடுப்பணை கட்டுமானம் நிறுத்தம்

இந்நிலையில் சிலந்தியாற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தும் படி கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. தினமலர் நாளிதழ் வெளியான படம் அடிப்படையில் உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

manivannan parameswari
மே 25, 2024 06:08

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் திவான்சாம் புதூர் இந்த இடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜான் கான் என்ற அணை உள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தில் ஒரு சிறிய பகுதி அடித்துச் செல்லப்பட்டது இதன் காரணமாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் போய் விட்டது. இதனால் சுற்றுவட்டாரத்தில்உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறு போர்வெல் ஆகியவற்றில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதை சரி செய்திருந்தால் அதைச் சுற்றி இருக்கும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனுடைய உயரம் 10 அடி நீளம் 140 அடி ஆகும். எவ்வாறேனும் இதை பராமரித்தோம் அல்லது புதிதாக அணை கட்டியோ தந்தாள் எங்கள் ஏரியா விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்


RK RS
மே 24, 2024 22:00

இது மாதிரியே கனிம வள கொள்ளைகளையும் கேரளாவுக்கு கடத்துவதையும் நிழல் படமாக போட வேண்டியதுதானே?


N Sasikumar Yadhav
மே 24, 2024 21:15

மக்கள் நலனில் அக்கறை உள்ள நாளிதழ் தினமலர் மட்டுமே . நன்றி தினமலர் நாளிதழுக்கு


Kumaran
மே 24, 2024 20:50

அரசுக்கு பொறுப்பில்லை, அச்சக ஊடகம் அசத்தல்


sankaranarayanan
மே 24, 2024 20:27

தினமலர் நாளிதழ் வெளியான படம் அடிப்படையில் உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்து உள்ளது. இதைக்கேட்கவே வெட்கமாக உள்ளது வேதனையாக உள்ளது கேரளா அரசு அணைக்கட்ட ஆரம்பித்து பாதிவரை வந்தபின்தான்இந்த அரசு நாளிதழில் வந்த பிறகு விழித்துக்கொண்டதா? ஏன் இதுவரை இந்த துறை தூங்கியதா? இந்த இதழில் இந்த செய்தி வராவிடில் என்னவாகும் மக்களே சிந்தித்து பாருங்கள் அணையையே அவர்கள் கட்டி முடித்கிருப்பார்கள் பிறகு வருந்தி என்ன பயன்?


Santhakumar Srinivasalu
மே 24, 2024 19:53

நம்ம அதிகாரிகள் ஆய்வை அரசிடம் தான் சமர்ப்பிக்க வேண்டும். எப்படி பாதிப்பு இல்லை என்று பத்திரிக்கைகளூக்கு அறிக்கை கொடுக்கலாம்? இவர்கள் கேரளா அரசை சார்ந்தவர்களா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை