மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
பந்தலுார்:பந்தலுார் அருகே குதிரைவட்டம் பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைவட்டம் பழங்குடியின கிராமத்திற்கு, குடிநீர் சப்ளை செய்யும் குழாயின் கேட்வால்வை தனிநபர் உடைத்து அதை மீண்டும் பொருத்த முடியாத வகையில் பூட்டி வைத்திருந்தார். அதனால், பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வினியோகம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். அருகில் உள்ள கிணற்றில் தண்ணீரை சுமந்து வந்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து நேற்று 'தினமலரில்' படத்துடன் செய்தி வெளியானது. ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கேட்வால்வு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனை சரி செய்து குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா கூறுகையில், ''பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும், குழாய்களை உடைப்பது தவறானது. இது போன்ற செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழங்குடியின கிராமத்தில் குடிநீர் குழாய் உடைத்தது குறித்து பொதுமக்கள் புகார் கூற முன் வராத நிலையில், நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனினும், குழாய் வால்வை உடைத்து பூட்டு போட்ட நபர் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும்,'' என்றார்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025