மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சியில், வாயலுார், உய்யாலிகுப்பம், காரைத்திட்டு, தண்ணீர்பந்தல்மேடு, பெரிய காலனி, சின்ன காலனி, சத்திரம் ஆகிய பகுதிகள் உள்ளன.இப்பகுதியில் ஊராட்சி சமுதாயக்கூடம் இன்றி, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை தனியார் மண்டபங்களில் நடத்தி சிரமப்பட்டனர். தொகுதி மேம்பாட்டு நிதி
எனவே, இப்பகுதியினர் சமுதாயக்கூடம் அமைக்க வலியுறுத்தினர். முன்னாள் காஞ்சிபுரம் - காங்கிரஸ் எம்.பி., விஸ்வநாதன் பரிசீலித்து, கடந்த 2012 - 13 தொகுதி மேம்பாட்டு நிதியில், 30 லட்சம் ரூபாய் அளித்தார். சின்ன காலனியில், மேல்தளத்துடன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.நிதி பற்றாக்குறையால் பணிகளை முடிக்காத நிலையில், ஊராட்சி ஒன்றிய பொது நிதி 4 லட்சம் ரூபாய் மற்றும் கிராமத்தினர் பங்களிப்பு வாயிலாக கட்டி முடிக்கப்பட்டது.கூடத்திற்கு மின் இணைப்பு பெறப்படாமல், மேஜைகள், இருக்கைகள், சமையல் பாத்திரங்கள் ஆகியவை வாங்காமல், 10 ஆண்டு களுக்கும் மேலாக பயனின்றி சீரழிந்தது. புதிய வண்ணம்
இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், பொலிவிழந்த கட்டடத்திற்கு, புதிய வண்ணம் தீட்டி பராமரித்து உள்ளது.நிகழ்ச்சிகள் நடத்த தேவையான பொருட்களையும் வாங்கி, அப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, வட்டார வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025