உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செய்தி எதிரொலி மின்கம்பம் சீரமைப்பு

செய்தி எதிரொலி மின்கம்பம் சீரமைப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. தற்போது, நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், 30.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வார்டு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் எடுக்கப்பட்டு, தண்ணீர் செல்லும் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.அப்போது, கடப்பேரியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் பள்ளம் எடுக்கப்பட்ட போது, பொக்லைன் ஓட்டுனரின் கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது வாகனம் மோதி சேதமடைந்தது.இதனால், மின் கம்பம் உடைந்து, கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. தற்காலிக தீர்வாக சேதமடைந்த மின்கம்பத்தை, இரும்பு கம்பிகளால் கட்டி ஒருங்கிணைத்து அப்பகுதி வாசிகள் பாதுகாத்து வந்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரம் உதவியுடன், மின் கம்பத்தை, சிமென்ட் கான்கிரீட் கலவை கொண்டு, புதிதாக சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை