செய்தி எதிரொலி:ஆதார் மையத்தில் இருக்கை வசதி
ஸ்ரீபெரும்புதுார் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும், அரசு ஆதார் சேவை மையத்திற்கு வருவோர் அமர இருக்கை வசதி இல்லாமல் இருந்தது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வருவாய் துறையினர், ஆதார் மையத்தில் இருக்கை வசதி ஏற்படுத்தி உள்ளனர்.