உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி சீட்டணஞ்சேரியில் ரேஷன் கடை திறப்பு

தினமலர் செய்தி எதிரொலி சீட்டணஞ்சேரியில் ரேஷன் கடை திறப்பு

உத்திரமேரூர், :உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சி, சீட்டணஞ்சேரி கிராமத்தில், ரேஷன் கடை இல்லாததால், அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்து வினியோகிக்கப்பட்டு வந்தன.இதனால், போதுமான இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்கி வந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் அவ்வப்போது செய்திகள் வெளியானது.இதனிடையே, சீட்டணஞ்சேரியில் புதியதாக ரேஷன் கடை கட்ட ஒன்றிய பொது நிதியின் கீழ், 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அதற்கான பணி துவங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன், பணி நிறைவு பெற்றது.எனினும், அப்பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலேயே ரேஷன் கடை தொடர்ந்து இயங்கியது.இதுகுறித்து, கடந்த மாதம் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், சீட்டணஞ்சேரி புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ