உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பள்ளிக்கு அழுகல் முட்டை நிறுவனத்திற்கு நோட்டீஸ்; தினமலர் செய்தி எதிரொலி 

பள்ளிக்கு அழுகல் முட்டை நிறுவனத்திற்கு நோட்டீஸ்; தினமலர் செய்தி எதிரொலி 

சிவகங்கை: தினமலர் செய்தி எதிரொலியால் சிவகங்கை பள்ளிகளுக்கு அழுகிய முட்டை சப்ளை செய்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.சிவகங்கை பகுதி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டை அழுகிய நிலையில் இருப்பதாக, தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் பி.ஏ.,(சத்துணவு), மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, சிவகங்கை பி.டி.ஓ., ஆகியோர் பள்ளி வாரியாக கள ஆய்வு செய்தனர்.இதில், கீழப்பூங்குடி அரசு மேல்நிலை பள்ளிக்கு அளித்த 1,750 முட்டைகளை ஆய்வு செய்ததில், எடை குறைவாக 82, அழுகிய நிலையில் 42 என 124 முட்டைகளை கண்டறிந்து, அவற்றை மாற்றி கொடுத்துள்ளனர். மேலும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு முட்டை சப்ளை செய்த நாமக்கல் சஷ்டிகுமார் பவுல்ட்ரி பார்ம் நிறுவன மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இனி வரும் காலங்களில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும், பள்ளி சத்துணவு மையங்களில் இறக்கப்படும் முட்டைகளை உரிய ஆய்வு செய்து, அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகம் மூலம் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ