உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / கால்வாய் சுத்தமானது!

கால்வாய் சுத்தமானது!

திருப்பூர்;திருப்பூர், 58வது வார்டு, தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றி, சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியிருந்தது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகளுக்கு கொசுத்தொல்லை அதிகமாவதாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் அவ்விடத்துக்கு சென்று கால்வாயில் தேங்கியிருந்த மண்ணை அகற்றினர். அங்கன்வாடி சுற்றியிருந்த முட்புதர்களை அகற்றி, கொசுமருந்து தெளித்தனர். கால்வாய் அடைப்பு சுத்தமாகியதால், அப்பகுதி பெற்றோர் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை