உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் செல்ல வழிவகை

தினமலர் செய்தி எதிரொலி அரும்புலியூர் ஏரிக்கு பாலாற்று தண்ணீர் செல்ல வழிவகை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலான 690 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி, மழைக் காலத்தில் முழுமையாக நிரம்பினால், அந்த தண்ணீரை கொண்டு அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் பகுதிகளில் உள்ள, 1,060 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.இந்த ஏரிக்கு பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் துணைக் கால்வாய் உள்ளது. தடுப்பணை நிரம்பி வழிந்தால் இக்கால்வாய் வாயிலாக தண்ணீர் சென்று அரும்புலியூர் ஏரி நிரம்ப வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.எனினும், இந்த தடுப்பணை வாயிலாக, அரும்புலியூர் ஏரிக்கு தண்ணீர் செல்வதில் கால்வாயில் சில இடங்களில் தடை ஏற்பட்டது.அதாவது பாலாற்று தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கான நீர் வரத்து கால்வாய் கரையின், குறிப்பிட்ட சில பகுதி மிகவும் தாழ்வானதாக உள்ளது. இதனால், கால்வாய் வாயிலாக வரும் தண்ணீர் தாழ்வான கரைப் பகுதி வழியாக ஆற்றில் மடைமாறி செல்லும் நிலை இருந்தது.எனவே, அரும்புலியூர் ஏரிக்கான பாலாற்று நீர்வரத்து கால்வாயின் தாழ்வான பகுதிகளை உயர்த்தி கட்ட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்த செய்தி, கடந்த மாதம் 29ம் தேதி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பழையசீவரம் பாலாற்று தடுப்பனையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதிகள் சீரமைத்தல் மற்றும் தாழ்வான பகுதிகளை உயர்த்தி கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நீர்வளத் துறை சார்பில் இரு தினங்களாக மேற்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை