உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி அங்கன்வாடி மையம் லிங்காபுரத்தில் திறப்பு

தினமலர் செய்தி எதிரொலி அங்கன்வாடி மையம் லிங்காபுரத்தில் திறப்பு

வாலாஜாபாத்;வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் கிராம அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் பயில்கின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து, இக்கட்டடம் இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் ஊராட்சி கனிமவள நிதியின் கீழ், 13 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.இந்த கட்டடத்திற்கான பணி முழுமையாக நிறைவு பெற்று, எட்டு மாதங்கள் கடந்தும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதனால், அப்பகுதி குழந்தைகள் 1 கி.மீ., துாரத்தில் உள்ள நல்லுார் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பயின்று வந்தனர். எனவே, லிங்காபுரத்தில் உள்ள புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி வாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த 8ம் தேதி நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, லிங்காபுரம் புதிய அங்கன்வாடி மையத்தை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார். ஊராட்சி தலைவி மகாலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை