உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ஹைமாஸ் விளக்கு கம்பம் சீரமைப்பு

ஹைமாஸ் விளக்கு கம்பம் சீரமைப்பு

புதுச்சேரி: ஹெலிபேடு மைதானத்தில் மண் அரிப்பு காரணமாக சாய்ந்து விழும் நிலையில் இருந்த ஹைமாஸ் விளக்கு கம்பம் சீரமைக்கப்பட்டது. லாஸ்பேட்டை, ெஹலிபேடு மைதானத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங் செல்கின்றனர். நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, ெஹலிபேடு மைதானத்தில், புதிய சாலை அமைக்கப்பட்ட ஐந்து இடங்களில் பொதுப்பணித் துறை சார்பில், ைஹமாஸ் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனால், ஒளி வெள்ளத்தில் பொதுமக்கள் நிம்மதியாக வாங்கிங் செல்கின்றனர். இந்நிலையில், கனமழை காரணமாக ைஹமாஸ் கம்பங்களை சுற்றியுள்ள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, ஏர்போர்ட் எதிரில், பொதுமக்கள் யோகா பயிற்சி செய்யும் இடத்தில் உள்ள ைஹமாஸ் விளக்கின் அடியில் கடுமையாக மண் அரிப்பு ஏற்பட்டு, எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில், இளநிலை பொறியாளர் லோகநாதன் மற்றும் ஊழியர்கள் உடனடியாக நேற்று அங்கு சென்று, மண் அரிப்பு ஏற்பட்டு கீழே விழும் நிலையில் இருந்த ைஹமாஸ் விளக்கு கம்பத்தை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை