உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / வாகனங்களின் டயர்களை கிழித்த மேன்ஹோல் சரி செய்யப்பட்டது

வாகனங்களின் டயர்களை கிழித்த மேன்ஹோல் சரி செய்யப்பட்டது

கிளாம்பாக்கம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவு வாயில் அருகே, வாகனங்களின் டயர்களை கிழித்து, விபத்தை ஏற்படுத்தி வந்த 'மேன்ஹோல்' சரி செய்யப்பட்டது.வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் வெளிப்பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையின் ஒரு பகுதி சேதமாகி, அதில் இருந்த இரும்பிலான 'மேன்ஹோல்' முழுதும் பெயர்ந்து நின்றது.இதனால், பேருந்து முனையம் உள்ளே செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் இந்த 'மேன்ஹோல்' மீது ஏறி இறங்கும்போது, வாகனங்களின் டயர்கள் சேதமாகின. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துபெரிய அசம்பாவிதம் நடக்கும் முன், சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்தி, 'மேன்ஹோல்' மற்றும் சேதமான சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழ் செய்தி வெளியிட்டது.செய்தியின் எதிரொலியாக அந்த 'மேன்ஹோல்' மற்றும் சாலையின் பள்ளம் சரிசெய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை