உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / மேட்டுப்பாளையம் சாலை சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

மேட்டுப்பாளையம் சாலை சீரமைப்பு; தினமலர் செய்தி எதிரொலி

மேட்டுப்பாளையம்; தினமலர் செய்தி எதிரொலியால், மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கப்பட்டது.மேட்டுப்பாளையம்-கோவை சாலை, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்டதாகும். கோடை சீசன் துவங்கியதை அடுத்து, கோவை-மேட்டுப்பாளையம், ஊட்டி சாலையில் பர்லியாறு வரை, சாலைகளில் உள்ள குழிகளை நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்து வருகின்றனர். சாலையின் இருபக்கம் உள்ள தடுப்பு சுவர்களுக்கும், பாலங்களுக்கும் வெள்ளையடித்து வருகின்றனர்.இந்நிலையில் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன் முன்பாக, சாலையில் பெரிய குழி இருந்தது. இந்த குழியால் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இது சம்பந்தமாக தினமலரில் போட்டோவுடன் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக, தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாக அதிகாரிகள், நகராட்சி எல்லை அருகே சாலையில் உள்ள குழியை சீரமைத்து தார் கலவை போட்டு சாலையை சீரமைக்கும்படி, நகராட்சி அதிகாரிகளிடம், கூறினர். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேண்டுகோளை ஏற்று, நகராட்சி நிர்வாகத்தினர் சாலையை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை