வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பாவி
ஏப் 12, 2025 11:27
அது என்ன TN நு ரிஜிஸ்ரேஷன் இருக்கு. அதையும் தமிழில் எழுதுங்க.
தேனி : தேனி மாவட்டத்தில் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் பெயர் பலகைகளில் தமிழை தவிர்த்த ஆங்கிலத்தில் மட்டும் துறை, பதவி பெயர் பொறிக்கப்படுகிறது. இதனை சுட்டிகாட்டி மார்ச் 28 ல் 'தமிழ் பெயர் பலகையை தவிர்க்கும் அரசு அதிகாரிகள்' என்ற தலைப்பில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து தமிழ்வளர்ச்சித்துறை மூலம் அனைத்து துறைகளுக்கும் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் கடிதம் எழுதினார். அதில் தமிழில் பெயர்பலகை வைக்க அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் பல அரசுத்துறை வாகனங்களில் பெயர் பலகைகள் தமிழில் எழுதப்பட்டு வருகின்றன.
அது என்ன TN நு ரிஜிஸ்ரேஷன் இருக்கு. அதையும் தமிழில் எழுதுங்க.