பழைய பஸ் ஸ்டாண்ட் ஐமாஸ் லைட் சீரமைப்பு : தினமலர் செய்தி எதிரொலி
கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஐமாஸ் லைட்டை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர் கூடலுார் நகர பகுதியில் தெருவிளக்குகள் மட்டுமின்றி. முக்கிய இடங்களில் ஐமாஸ் லைட் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஐமாஸ் லைட் மற்றும் பல தெருவிளக்குகள் ஒளிராமல் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. அப்பகுதி இரவு நேரங்களில் இருளில் மூழ்கியது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் நேற்று ஐமாஸ் லைட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கூறுகையில், 'நகரில் உள்ள தெருவிளக்குகள், ஐமாஸ் லைட்டுகள் பராமரிப்பு இல்லாததால் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் தெரு விளக்குகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்,' என்றனர்.