மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் கிடைத்தது வெளிச்சம்
10-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியிலுள்ள ஒரு தனியார் மைதானத்தில் சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த டைகர் நிறுவனம் ஹெலிகாப்டர் ரைடு நடத்தியது. தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து நடத்திய அந்த ரைடில் தினமும் 30 முறை 4 பயணிகள் வீதம் அழைத்து சென்றனர். ஒரு பயணிக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூலித்தனர். ஆனால் அந்த நிறுவனம் மாநகராட்சிக்கு கட்டணம் எதுவும் செலுத்தவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கமிஷனர் மோனிகா ரானா அந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.ஆறு நாட்கள் ரைடு முடிந்த பிறகு அந்த நிறுவனம் மாநகராட்சிக்கு ரூ.ஒரு லட்சம் கேளிக்கை வரி செலுத்தியதாக கமிஷனர் மோனிகா ரானா தெரிவித்தார்.
10-Sep-2025