மேலும் செய்திகள்
காஞ்சியில் ரேஷன் கடை திறப்பு
06-Oct-2024
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பனங்கொட்டூர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட மூன்று இடங்களில், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், தலா 12.30 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.அதேபோல கிழக்கு பொத்தேரி, செங்குன்றம், பகுதியில், தலா 11 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு, சில மாதங்களாக திறப்பு விழாவிற்கு காத்திருந்தன. இவை குறித்த செய்தி சமீபத்தில் நம் நாளிதழில் வெளியானது.இதன் எதிரொலியாக, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, இந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
06-Oct-2024