மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தீர்வு
27-Feb-2026
கேட்பாரற்று நின்ற கார் அகற்றம்
23-Feb-2026
தினமலர் செய்தியால் புதிய சுகாதார நிலையம்
22-Feb-2026
தினமலர் செய்தி: சீரானது ரோடு
20-Feb-2026
திண்டுக்கல்:'தினமலர்' செய்தி எதிரொலியாக பழனி முருகன் கோவில் 3வது வின்ச் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.பழனி முருகன் கோவிலில் நேற்று தைப்பூசம் கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். மலைக்கு செல்ல படிப்பாதை தவிர 2 வின்ச், ரோப்கார் செயல்பட்டு வருகின்றன. 2 வின்ச்கள் பயன்பாட்டில் இருந்தன. 3வது வின்ச் தயார் செய்யப்பட்டு அனைத்து சோதனைகளும் முடிந்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து 3வது வின்ச் சேவையினை அமைச்சர் சக்கரபாணி துவக்கிவைத்தார். எம்.பி. வேலுச்சாமி, எம்.எல்.ஏ. செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, ஆர்.டி.ஓ. சரவணன், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி பங்கேற்றனர்.
27-Feb-2026
23-Feb-2026
22-Feb-2026
20-Feb-2026