உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் சாலை பணிக்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு

உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் சாலை பணிக்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு

உத்திரமேரூர்:நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, உத்திரமேரூர் அரசு போக்கு வரத்து பணிமனை வ ளாகத்தில் கான்கிரீட் சாலை அமைக்க, 11 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. உ த்திரமேரூரில், அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் ஓட்டுநர், நடத்துநர், எலெக்ட்ரீசி யன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள, பணிமனை வளாகம் கான்கிரீட் தரை அமைக்கப்படாமல், மண் தரையாகவே இருந்து வருகிறது. இதனால், மழை நேரங்களில் வளாகத்தில் மழைநீர் தேங்கி சகதியாக மாறுகிறது. பணிமனையில் துாய்மைப்படுத்தப்பட்டு வெளியே வரும் பேருந்துகளும் அசுத்தமாக மாறுகின்றன. இது குறித் த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில் கான்கிரீட் சாலை அமைக்க, 2025 -- 26ம் நிதி ஆண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், 11 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இது குறித்து உத்திர மேரூர் அரசு போக்கு வரத்து பணிமனை மேலாளர் நாராயணன் கூறுகையில், ''உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில், கான்கிரீட் சாலை அமைக்க, 11 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான, பணிகள் இந்த மாத இறுதிக்குள் துவங்கப்பட உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ