உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பயன்பாட்டிற்கு வந்த நுாலகம் தினமலர் செய்தி எதிரொலி

பயன்பாட்டிற்கு வந்த நுாலகம் தினமலர் செய்தி எதிரொலி

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், திருமலை ராஜபேட்டையில், 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். லவா ஆற்றங்கரையை ஒட்டி இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. வீடு, வயல்வெளி என நாள் முழுதும் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள், முக்கிய தேவைகளுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிப்பட்டு நகருக்கு சென்று வருகின்றனர். கிராமத்திலேயே வசிக்கும் இவர்களுக்கு, வெளியுலக நடப்புகளை அறிந்து கொள்ள வசதியாக ஊராட்சி நுாலகம் செயல்பட்டு வந்தது.கடந்த சில ஆண்டுகளாக இந்த நுாலகம் செயல்படாமல் பூட்டிக்கிடந்தது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், பயனில்லாத நுாலக வாயிலில் மாடுகளை கட்டி வைத்து தொழுவமாக பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இந்த நுாலகம் தற்போது சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை