மேலும் செய்திகள்
அனைத்து அலுவலகங்களிலும் கொடியேற்ற வலியுறுத்தல்
11-Aug-2025
நெல்லிக்குப்பம் ; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் வி.ஏ.ஓ., அலுவலகங்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் சரவணபுரம், சோழவல்லி வி.ஏ.ஓ. அலுவலகங்கள் கட்ட தலா 10 லட்சம் மதிப்பில் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் கட்ட டெண்டர் விடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கபடாமல் காட்சிப் பொருளாக இருந்து வந்தது. கடந்த 10 தினங்களுக்கு முன் திடீரென நகர மன்ற தலைவர் ஜெயந்தி விழாவாக நடத்தாமல் சாதாரணமாக வி.ஏ.ஓ., அலுவலகங்களை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். இந்த அலுவலகங்களில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வசதி செய்யவில்லை. மின் இணைப்பு வழங்கவில்லை. இதுபோன்று பணிகள் முழுமை பெறாததால் திறப்பு விழா நடத்தியும் பயன்பாட்டிற்கு வரவில்லை என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, மின் இணைப்பு வழங்கப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. கழிவறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
11-Aug-2025