உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நாணயம் வெளியீட்டுக்கு பின், மத்திய, மாநில அரசுகள் தொடர்பாக நிறைய கதைகள் பேசப்படுகின்றன. மக்கள் பிரச்னைகளை, மாநில அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும்ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுகிறோம்; இதில் மற்ற விஷயங்களை சேர்ப்பது கற்பனை.டவுட் தனபாலு: 'தி.மு.க.,வுக்கும், எங்களுக்கும் என்றைக்குமே கொள்கை ரீதியா ஒத்துப் போகவே போகாது... ஊடகங்கள் தான் கட்டுக்கதைகளை பரப்புகின்றன'என, பாய்ந்தடித்து மறுப்பு தெரிவிக்காமல், பூசி மெழுகி நீங்க பேசுவதே, என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது என்ற, 'டவுட்'களை கிளப்புதே!தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்: 'பா.ஜ.,வுக்கு கை இல்லை, கால் இல்லை' என்று கூறிய திராவிட கட்சிகளுக்கு மத்தியில்,பா.ஜ., தலைமையில் கூட்டணி அமைத்து, அ.தி.மு.க.,வை பல இடங்களில் டிபாசிட் இழக்க செய்து, 18 சதவீத ஓட்டுவங்கியை தமிழகத்தில் வாங்கி காட்டியவர் அண்ணாமலை. டவுட் தனபாலு: அண்ணாமலையின் சாதனையை நல்லாவே எடுத்து சொல்றீங்க... ஆனாலும், 'அ.தி.மு.க., என்ற கட்சியின் ஓட்டு வங்கியை அபகரித்து தான், பா.ஜ.,வை வளர்த்திருக்கார்... புதியவர்கள் ஓட்டுகளை பா.ஜ., பக்கம் திருப்ப அவர் எந்த முயற்சியும் எடுக்கலை'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: மரியாதைநிமித்தமாக முதல்வரைசந்தித்தேன். முதல்வருக்கு திருமண நாள்; அதற்கு வாழ்த்து கூறினேன். காந்தி குறித்த புத்தகத்தை பரிசாக அளித்தேன்; வேறு ஒன்றும் பேசவில்லை.டவுட் தனபாலு: அடடா... முதல்வரின் பிறந்த நாளுக்கு வாழ்த்தப் போறது சகஜம்... அவரது, திருமண நாளை தெரிஞ்சு வச்சுக்கிட்டு, நேர்ல போய் வாழ்த்து சொல்றது, கொஞ்சம் ஓவரா தெரியுதே... பா.ஜ.,வும் - தி.மு.க.,வும் நெருங்கி வர்றதை பார்த்துட்டு, பதறியடிச்சு, 'இண்டி' கூட்டணியை மறந்துடாதீங்கன்னு நினைவுபடுத்திட்டு வந்தீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Suppan
ஆக 22, 2024 17:15

காந்திக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ?. காந்தி சனாதனத்தைப் போற்றியவர் .


D.Ambujavalli
ஆக 22, 2024 16:27

காதலிப்பவர்களுக்கு, சில நடிக நடிகைகளும், 'இன்னாருடன் வெறும் நட்புதான்' என்று மறுத்துவிட்டு திருமணம் செய்துகொள்வது போல்தான் இந்த 'திமுக பாஜக ' கூட்டணி மறுப்பும் என்பது கொஞ்ச நாளிலேயே தெரிந்துவிடும்


சமீபத்திய செய்தி