உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சொல்லியிருக்கிறார். மேலும், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என்றும் சொல்லி சென்று இருக்கிறார். அவர் உ.பி.,யில் எப்படி ஆட்சி நடத்தினார் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் தான் இன்று, உ.பி.,யில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளார். ஆனாலும், அவரை நாங்கள் வெறுக்கவில்லை.டவுட் தனபாலு: மாயாவதி கருத்தின் உள்ளர்த்தம் உங்களுக்கு புரியலையா... 'தி.மு.க.,வினரை மாதிரி ஆட்சி நடத்தி தான், உ.பி.,யில் இன்று நான் ஓரங்கட்டப்பட்டிருக்கேன்... உங்களுக்கும் அந்த கதி வந்துடக் கூடாது'ன்னு அவங்க அபாய மணியை அடிச்சிட்டு போயிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயசீலன், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதை ஏற்பதாக பாரிவேந்தர், கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்தனர். டவுட் தனபாலு: பரவாயில்லையே... அந்த கட்சியில் கூட, தோல்விக்கு பொறுப்பேற்று ஒரு நிர்வாகி ராஜினாமா பண்ணியிருக்காரு... ஆனா, அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., போன்ற பெரிய பெரிய கட்சிகள்ல, தோல்விக்கு பொறுப்பேற்க யாருமே இல்லையா என்ற, 'டவுட்'தான் வருது!காங்., தேசிய தலைவர் மல்லி கார்ஜுன கார்கே: நாட்டின் இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருப்பதே, மத்திய பா.ஜ., அரசின் ஒரேயொரு நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைத்ததற்கு, மோடி அரசு தான் முழு பொறுப்பு. இது தான் உண்மை.டவுட் தனபாலு: நாடு முழுக்க, காங்கிரசில் இருக்கும் பல கோடி இளைஞர்கள் ஆட்சி, அதிகாரம் கிடைக்காமல் கையை கட்டிட்டு சும்மா இருக்காங்களே... அவங்களை தான் வேலையில்லாம மோடி வச்சிருக்கார்னு விசனப்படுறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஜூலை 13, 2024 09:36

நாட்டில் இருக்கும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தான் 40 ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய பாடதபிறதமராக இருந்த ராஜிவ்காந்தி அவர்கள் படித்த்வர்கள் சுயதொழில் செய்து முன்னேறலாம் என்று வெளிநாட்டுப் பாணியில் படித்த இளைஞர்களுக்கு வங்கிகள்மூலம் கடங்கொடு த்தார் அதனால் சுயதொழில் கள் பெருகும் தனிநபர்கள் வருமானமும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இதை செயல்படுத்தினார். இதனால் அவருக்கு ஒரு நல்ல பெயரும் கிடைத்தது,இன்றும் அந்த திட்டம் இன்றைய b.j.p. ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது, அப்படி இருக்கையில் எல்லோருக்கும் அரசுப்பணி என்று பேசிக்கொண்டிருந்தாள் எப்படி?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 12, 2024 21:41

முதலில் கார்கே அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, அவர் கட்சியில் இருக்கும் இளஞ்சர்களுக்கு வேலை கொடுக்கட்டும்.


D.Ambujavalli
ஜூலை 12, 2024 16:41

தன் கட்சியின் நிர்வாகி கொல்லப்பட்டதற்கு cbi விசாரணை கேட்கிறார் அதற்கும் அவரது முந்தைய ஆட்சிக்கும் முடிச்சுப் போடுவதேன் ? அவருக்கு தமிழ்நாடு போலீஸ், ஆளும் கட்சியின் கைப்பொம்மையான cbcid மீது நம்பிக்கையில்லை, கேட்கிறார்


சமீபத்திய செய்தி