உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர்: கடவுள் ஒருவரால் தான் யாரையும் ஆக்கவும், அழிக்கவும் முடியும். சிலர் என்னை அரசியலை விட்டு ஒதுக்க நினைக்கின்றனர். அது நடக்காது. திருச்சியை மையமாக வைத்து, என் அரசியல் பயணம் பல காலம் தொடரும்.டவுட் தனபாலு: திருச்சியை தான் ம.தி.மு.க.,வின் துரை வைகோவுக்கு பட்டா போட்டு குடுத்துட்டாங்களே... அது சரி... உங்க சீனியாரிட்டிக்கும், பல கட்சிகள்ல இருந்த உங்க அனுபவத்துக்கும், கட்சி தலைமையிடம் ராஜ்யசபா சீட் கேட்கணும் என்ற எண்ணம் உங்களுக்கு வராதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராம சீனிவாசன்: தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், 3 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகரித்து, தமிழகத்துக்கு 8.50 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொரு குடிமகன் பெயரில், 1.65 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்த சுமையால் தான் தமிழகத்தில் மின் கட்டணம், தொழில் வரி, வீட்டு வரி உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. கடன், போதையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில், 'தமிழகத்தை கடன்கார மாநிலமா பழனிசாமி மாத்திட்டு இருக்கார்'னு, தி.மு.க.,வினர் புகார் பத்திரம் வாசித்தாங்க... இப்ப, அவங்களும் அதே பாதையில் தானே பயணிக்கிறாங்க... தி.மு.க., ஆட்சி முடியுறப்ப, தமிழகத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!விருதுநகர் தொகுதி காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகளை, மத்திய அரசு, 'எல் அண்டு டி' நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. ஒப்பந்தப்படி, 2024 மார்ச்சில் தொடங்கி, 33 மாதங்களில் இரண்டு கட்டங்களாக, எய்ம்ஸ் கட்டடம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 18 மாதங்களில் முதல் கட்ட பணிகள் முடிந்து, நம் கண் முன் தெரியும் கட்டடமாக அது மாறும். டவுட் தனபாலு: 'எய்ம்ஸ்' மருத்துவமனை தமிழகத்துக்கு வரவே வராதுன்னு செங்கல்லை வைத்து பிரசாரம் செய்தவங்க, உங்களது இந்த பதிலை கேட்டு அதிர்ச்சி ஆகியிருப்பாங்க... 2026 சட்டசபை தேர்தலில், அவங்களுக்கு, எய்ம்ஸ் எந்த வகையிலும் உதாவது என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூலை 21, 2024 23:39

அதிமுக திமுக தலைவர்கள் ஆட்சிகாலத்தில் கொள்ளையடித்து சேர்த்த சொத்தில் 25% பறித்தால் தமிழகத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாயை ஈசியாக அடைத்து விட லாம்.


D.Ambujavalli
ஜூலை 21, 2024 16:45

இவ்வளவு கடன் ஏறுவதற்கு உருப்படியாக எதை செய்துவிட்டார்கள்? 10 லட்சம் ஆசைகாட்டி கள்ளச்சாராய மரணங்களுக்கு ஊக்கமளிப்பதும், வேண்டாத திட்டங்களுக்கு நிதியை திரும்புவதும் தவிர எதுவும் நடக்கவில்லையே மழைநீரை சேமிக்க எதுவும் விரலசைக்கவில்லை காவிரி எதிர்த்து வெள்ளம் வரவேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்தால் நமக்கு நீர் வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை