உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக பா.ஜ., மூத்த தலைவர்ஹெச்.ராஜா: தமிழக பா.ஜ., நிர்வாகத்தை கவனிக்க, என் தலைமையில் தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைத்த பிரதமர் மோடி, தேசிய தலைவர்நட்டா, அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோருக்கு நன்றி. தேசிய தலைமை எதிர்பார்க்கும் விதத்தில், அனைவரையும் அரவணைத்து, இக்குழுதமிழகத்தில் பா.ஜ.,வை வழிநடத்தும்.டவுட் தனபாலு: இவங்களுக்குஎல்லாம் நன்றி சொல்றது இருக்கட்டும்... அரசியல் படிக்கிறதுக்காக, லண்டன் போயிருக்கிற அண்ணாமலைக்குதான் நீங்க முதல் நன்றியை தெரிவிக்கணும்... அவர் மட்டும்,மூன்று மாத பயணமா லண்டன் கிளம்பியிருக்கா விட்டால், உங்களுக்கு இப்படி ஒரு பதவி கிடைச்சிருக்குமா என்பது, 'டவுட்' தான்!பத்திரிகை செய்தி: தமிழகத்தின்பல பகுதிகளில் கொடி கம்பம் நடுவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் போலீசார் அனுமதி தராததால், தி.மு.க., மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்அதிருப்தி அடைந்துள்ளன.டவுட் தனபாலு: பின்ன, எப்படிஅனுமதி தருவாங்களாம்...'பா.ஜ.,வுடன், தி.மு.க., சமரசமாகபோனால் ஏத்துக்க மாட்டோம்'னுகொடி பிடிச்சாங்கல்ல...அதுக்கான பதிலடியை ஆளுங்கட்சி இப்படித்தான் தரும் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன்: தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பம்.ஆனால், அனைவரின் எண்ணப்படி கட்சி ஒன்றிணைவதற்கு பழனிசாமி முட்டுக்கட்டையாக உள்ளார்; பதவி வெறியால் இப்படி குறுக்கே நிற்கிறார். அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் தான் எதிர்காலத்துக்கு நல்லது. டவுட் தனபாலு: பழனிசாமிக்கு பதவி வெறின்னு சொல்றீங்களே... 'அ.தி.மு.க., வை ஒன்றிணைக்க முன்வந்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல், அ.ம.மு.க.,வை இணைக்கிறேன்... எனக்கு சாதாரண தொண்டர் பதவியே போதும்'னு சொன்னால், உங்களுக்கு பதவி வெறி இல்லை என்பதை, 'டவுட்'டே இல்லாம ஏத்துக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

T.sthivinayagam
செப் 01, 2024 20:21

ரஜனி சார் சொன்ன ஓல்டு ஸ்டுடன்ட் அர்த்தம் இப்ப புரியுது


D.Ambujavalli
செப் 01, 2024 17:07

3 மாத leave vacancy க்கே இந்த லப்பறையா ? 'நாங்க பாடான பாடுபட்டு, பாஜவுடன் தாஜா செய்து பதவியை தக்க வைக்க 'முருகா முருகா' என்று அழைக்கிறோம் எங்கள் கஷ்டம் தெரியாமல் எதிர்ப்புக் குரல் எழுப்பினால் அதை எப்படிப் பொறுப்போம் ?


புதிய வீடியோ