உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி: அமெரிக்காவில், நம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தினமும் கையெழுத்தாகும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களின் பட்டியலை பார்த்து வயிற்றெரிச்சல் படும் பழனிசாமி, அதை திசை திருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு, எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. டவுட் தனபாலு: உங்களுக்கு பின் கட்சிக்கு வந்தவங்களும், அ.தி.மு.க.,வுல இருந்து வந்த பலரும் அமைச்சர்களா பவனி வர்றாங்களே... அண்ணாதுரை காலத்து அரசியல்வாதியான உங்களுக்கு எந்த பதவியும் கிடைக்காததுல, யார் மீதும் பொறாமையே வரலையா என்ற, 'டவுட்' வருதே!பா.ஜ., தேசிய தலைவர் நட்டா: அனைத்து கட்சிகளிலும் வாரிசுகள் அல்லது குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே தலைமை பதவிக்கு வர முடியும். மோடியை போல சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களும், நாட்டின் பிரதமராக வரும் ஒரே கட்சி, பா.ஜ., மட்டுமே. பா.ஜ.,வில் அனைவருக்கும் சம உரிமையும், வாய்ப்பும் உள்ளது.டவுட் தனபாலு: அதுவும் சரி தான்... காங்., - தி.மு.க., - ம.தி.மு.க., - ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, டி.ஆர்.எஸ்., தெலுங்கு தேசம்னு நாடு முழுக்க எந்த கட்சியை எடுத்துக்கிட்டாலும், வாரிசு அரசியல் தான் கோலோச்சுது... அந்த வகையில், பா.ஜ., ஒரு வித்தியாசமான கட்சி தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: பள்ளிக்கல்வி துறையில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுகின்றன. இதனால், அமைச்சர் மகேஷுக்கு துறையை மாற்றிக் கொடுக்கும் முடிவுக்கு முதல்வர் தரப்பினர் வந்துள்ளனர். வரும், 14ம் தேதி, முதல்வர் தமிழகம் திரும்புகிறார். அதன் பின், அமைச்சரவை மாற்றம் இருக்கலாம்.டவுட் தனபாலு: இதே, ஜெயலலிதா ஆட்சியாக மட்டும் இருந்திருந்தால், பள்ளிக்கல்வி துறையில் தொடரும் சர்ச்சைகளுக்கு, 10 அமைச்சர்களை மாத்தியிருப்பாங்க... தி.மு.க., அரசில் மட்டும் தான், தப்பு செய்றவங்களை துறை மாற்றி விடும் அபத்தங்கள் எல்லாம் நடக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.kausalya
செப் 10, 2024 07:49

உதயநிதி யை துணை முதலவர் ஆக்க ஒரு நிகழ்வு தேவை பட்டது. இதை மட்டுமெ செய்தால் விமர்சனம் ஆகும் . மந்திரிகள் துறை மாற்றம் என்னும் போது துணை முதலவர் நிகழ்வையும் சேர்த்து நடத்தினால் மக்கள் அதை அவ்வளவாக விமர்சிக்காமல், துறையை சரிவர செய்யாத அமைச்சரை மாற்றி முதல்வர் நிர்வாக சீர்திருத்தம் செய்து விட்டார் எனகொண்டு,அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை கட்சியின் பரம்பரை பல்லக்கு தூக்கும் தொண்டர்க ளிடம் விட்டு விடுவார்கள்


Surya Janakiraman
செப் 10, 2024 04:54

/டவுட் தனபாலு: உங்களுக்கு பின் கட்சிக்கு வந்தவங்களும், அ.தி.மு.க.,வுல இருந்து வந்த பலரும் அமைச்சர்களா பவனி வர்றாங்களே... அண்ணாதுரை காலத்து அரசியல்வாதியான உங்களுக்கு எந்த பதவியும் கிடைக்காததுல, யார் மீதும் பொறாமையே வரலையா என்ற, டவுட் வருதே/ இப்படிச் சொன்னல் எப்படி? எஸ்.ஆர்.பாரதியை விட்டால் அறிவாலயத்தில் ஏட்டு வேலை பார்ப்பதற்கு யாருக்குமே தகுதி கிடையாதே திமுக தலைமைக்கு முரட்டு முட்டு கொடுப்பதில் அவருக்கு இணை வேறு யார்? அமைச்சர் பதவிக்கு ஆயிரம் பேர் கிடைப்பார்கள்


D.Ambujavalli
செப் 09, 2024 18:57

ஜெ , கலைஞர் துணிச்சலை எல்லாம் இனி எதிர்பார்க்க முடியாது இவருடைய ஒவ்வொரு weakness உம் எல்லா அமைச்சருக்கும் தெரியும். பலவற்றைக் கண்டும் காணாமலும் போகும் நிர்ப்பந்தத்தில் இவர் உள்ளவரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம் அதிலும் 'சின்னவரின் ' அணுக்கத்தோழனை யாரும் அசைக்க முடியாது


HoneyBee
செப் 10, 2024 22:07

என்னாது கட்டுமரம் துணிச்சலா... நம்புக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை