வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிஜேபி ல சேந்த உடன் சசிகலா, தினகரன் எல்லாம் உத்தமபுத்திரர்களாக மாறிட்டானுங்க, , 2026 எலெக்சன் ல ஜெயிக்க பிஜேபி கரனுங்க எதுவெனலும் பண்ணுவானுங்க, அண்ணாமலைக்கு வேற வழி இல்ல,
எ1 குற்றவாளி மரணத்துக்கு காரணமவனுங்க
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தி.மு.க., ஆட்சியில், பட்டி தொட்டியெங்கும் போதைப்பொருட்கள் விற்பனை தடையில்லாமல் நடக்கிறது. அதை கட்டுப்படுத்த லாயக்கற்ற மக்கள் விரோத தி.மு.க., அரசுக்கு, வரும் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும்.டவுட் தனபாலு: நீங்களும் போற இடத்துல எல்லாம், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்துல ஆட்சியை பிடிக்கும்'னு தான் பேசுறீங்க... அதுல, உங்க கட்சியின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பதை சொல்றதில்லையே... உங்க கட்சி யின் பலம் உங்களுக்கு நிஜமாகவே தெரிஞ்சு போயிடுச்சோ என்ற, 'டவுட்'தான் வருது!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தி.மு.க., கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது. கருத்து முரண்கள் இருந்தாலும் கட்டுக்கோப்பாக, ஒற்றுமையோடு இருக்கிறோம். கூட்டணியில் எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. இக்கூட்டணியை உருவாக்கியதில், விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு அதிக பங்குஉள்ளது. அந்தக் கூட்டணியை காப்பாற்றும் பொறுப்பும் எங்கள் கட்சிக்கு உள்ளது. டவுட் தனபாலு: அது சரி... பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உருவாக்கிய, 'இண்டியா' கூட்டணியையே, 'எங்க தலைவர் ஸ்டாலின்தான் ஏற்படுத்தினார்'னு தி.மு.க., வினர் பெருமை அடிச்சிட்டு இருக்காங்க... நீங்களோ, 'தி.மு.க., கூட்டணியை உருவாக்கி, காப்பாத்திட்டு வர்றேன்'னு அடிச்சு விடுறீங்களே... இதனால, எதிர்காலத்துல கூட்டணியில் பிளவு வந்தா, முழு பழியும் உங்க தலையில் தான் விழும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தென்னை, பனை விவசாயிகள் கோரிக்கை குறித்து பா.ஜ., ஆய்வு செய்து, விரிவான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, 'தென்னை மற்றும் பனை மரங் களில் இருந்து கள் இறக்குவது, மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றால் அரசுக்கு, ஆண்டுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்' என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க., அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.டவுட் தனபாலு: கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையால அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பிருந்தும், 50,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிற, 'டாஸ்மாக்'கை ஏன் கட்டிட்டு அழுறாங்க...? கள் விற்பனையால, தி.மு.க.,வினருக்கு பெருசா லாபம் இல்லை என்பது இதன் மூலமா, 'டவுட்'டேஇல்லாம தெரியுது!
பிஜேபி ல சேந்த உடன் சசிகலா, தினகரன் எல்லாம் உத்தமபுத்திரர்களாக மாறிட்டானுங்க, , 2026 எலெக்சன் ல ஜெயிக்க பிஜேபி கரனுங்க எதுவெனலும் பண்ணுவானுங்க, அண்ணாமலைக்கு வேற வழி இல்ல,
எ1 குற்றவாளி மரணத்துக்கு காரணமவனுங்க