உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: தமிழகத்தில் பெண்களுக்கான ஆட்சி நடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், பெரும்பாலான திட்டங்கள் மகளிருக்காக உருவாக்கப்பட்டன. அவை வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது குறித்து எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தமிழக அரசியலின் புது வரவான த.வெ.க., தலைவர் விஜய், விளம்பர வெளிச்சத்துக்காக குறை கூறி வருகிறார்.டவுட் தனபாலு: பெண்களுக்காக நிறைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திட்டு வர்றதா சொல்றீங்களே... ஒட்டுமொத்த தமிழக பெண்களும் எதிர்பார்ப்பது, பூரண மதுவிலக்கு தான்... பெண்களுக்கான ஆட்சியை நீங்க நடத்துவது உண்மை என்றால், அதை முதலில் செய்து காட்டுங்க... 'டவுட்'டே இல்லாம, முதல் ஆளாக விஜய் உங்களை பாராட்டுவார்!  வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன்: தற்போது கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே, 20 சதவீதம், 24 சதவீதம் ஓட்டு பெற முடியும். அடுத்த முதல்வர் இவர் தான் என வலிந்து பூதாகரப்படுத்துகின்றனர். இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. ஓட்டு சதவீதம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது. ஆனாலும், சமூகம் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.டவுட் தனபாலு: நீங்க, நடிகர் விஜயைத் தான் சொல்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது... நீங்க மாறி மாறி கூட்டணி அமைக்கிற திராவிடக் கட்சிகளின் அரை நுாற்றாண்டு ஆட்சியில், தமிழக மக்கள் வெறுத்து போயிருக்காங்க... அதனால தான், விஜய் கட்சிக்கு இவ்வளவு வரவேற்பு என்பதிலும், 'டவுட்'டே இல்லை!  தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: பெண் கல்வியை முன்னெடுத் தது, ஈ.வெ.ரா.,வும், சுயமரியாதை இயக்கமும் தான். முதல்வராக இருந்த கருணாநிதி, பெண்களுக்கு உள்ளாட்சி யில் 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார். இப்போது, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்குகிறோம். டவுட் தனபாலு: உள்ளாட்சிகளில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குறீங்க என்பதில் எந்தவித, 'டவுட்'டும் இல்லை... ஆனா, அவற்றில் எத்தனை சதவீதம் இடங்களில் தந்தை, கணவர், அண்ணன், தம்பின்னு தங்களது குடும்ப ஆண்கள் தலையீடு இல்லாம பெண்கள் சுதந்திரமா இயங்குறாங்க என்பதை, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா?  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

திகழ் ஓவியன், Ajax, Ontario
மார் 11, 2025 08:20

பாவம், gummidipoondi தாண்டாத தால் நாட்டு நடப்பே தெரியல... கட்சி ஆரம்பித்த அடுத்த தேர்தலில் முதல்வர் ஆனார் கெஜ்ரிவால், முதல் தேர்தலில் வெற்றி பெற்ற எம் எல் ஏ முதல்வர், துணை முதல்வர்...இன்னும் 1967 லேயே இருந்தா இப்பிடி தான்


D.Ambujavalli
மார் 11, 2025 06:30

புதிதாகக் கட்சி ஆரம்பித்தவரை ஒரேயடியாக அதைரியப்படுத்தாமல் சற்று உயர்த்திய பேசுவார்கள் இதெல்லாம் birthday greetings போல தானே தவிர அதற்கெல்லாம் பொழிப்புரை எழுதுவது, உள்ளுக்குள் குளிர் கிளம்பியிருப்பதைக் காட்டுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை