உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பத்திரிகை செய்தி: தேர்தல் வாக்குறுதியின்படி, வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுக்கு வாய்ப்பு அளிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. ஆனால், தி.மு.க., சார்பில் கமல் போட்டியிட வேண்டும் என்றும், தி.மு.க., - எம்.பி.,க்கள் வரிசையில், அவர் இடம்பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுவதாகவும், இதனால், கமல் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிகிறது. டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தாலே, 'கட்டிப்புடி வைத்தியம்' பார்த்தே கட்சியை கரைச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை... இப்படி ஆரம்பிச்சு, கடைசியில கமல் கட்சியையே தி.மு.க.,வுல ஐக்கியமாக வச்சிடுவாங்க என்பதிலும், 'டவுட்' இல்லை!தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'அ.தி.மு.க.,வில் பழனிசாமி, வேலுமணி, தங்கமணி என யாராக இருந்தாலும், எனக்கு ஜூனியர் தான்' என, செங்கோட்டையன், தன் நண்பர்களுடன் பேசிய தகவல் வந்திருக்கிறது. இதில் இருந்து அவர் எந்த அளவிற்கு ஆதங்கத்தில் இருக்கிறார் என்பதையும், அங்கு இருக்கும் சீனியர்கள் எந்தளவிற்கு ஆதங்கத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.டவுட் தனபாலு: தி.மு.க., விலும் உங்களை விட எத்தனையோ சீனியர்கள் இருக்காங்களே... அ.தி.மு.க.,வில் இருந்து வந்த நீங்க, மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், மாவட்ட செயலர்னு பதவிப் படிகளில் ஏறிட்டே போவதும், சீனியர் தொண்டர்கள் கீழே நின்று குமுறுவதும், உங்க காதுல விழலையா என்ற, 'டவுட்' வருதே!பீஹாரில், ஜன் சுராஜ் என்ற கட்சியை நடத்தி வரும், பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர்: ஜன் சுராஜ் கட்சியை நடத்த எனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர். என் அறிவுத்திறனால் எனக்கு பணம் வருகிறது. சரஸ்வதி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்ட எவருக்கும், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் நிச்சயம் கிடைக்கும்.டவுட் தனபாலு: அது சரி... சரஸ்வதி தேவியை அறிவுக்கான கடவுள்னு சொல்லுவாங்க... 'அது இல்லாத அரசியல்வாதிகளுக்கு என் அறிவால் வியூகம் வகுத்து, தேர்தலில் வெற்றி பெற வைக்கிறேன்... அவங்க கொட்டிக் கொடுக்கிற கோடிகள் எனக்கு கட்சி நடத்த உதவியா இருக்குது'ன்னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
பிப் 15, 2025 23:06

ஐம்பதாண்டு சீனியர்கள் கழகத்திலிருக்க எதிர்ப்பை காட்ட முடியாமல் போட்டி போட்டுக்கொண்டு நேற்று முளைத்த காளானுக்கு அடிபணிந்து, போதாகுறைக்கு அந்த காளான் மகன் வந்தாலும் எழுந்து நின்று சல்யூட் அடிக்கும் அடிமைத்தனத்தை ஊரே பார்த்துக்கொண்டிருக்கிறது.


Anantharaman Srinivasan
பிப் 15, 2025 22:55

திமுக என்ற தொன்னையில் தான் ராஜ்யசபா பதவி என்ற பாயாசம் .. இஷ்டமிருந்தால் சீட் இல்லையேல் ஜகா வாங்கு.


D.Ambujavalli
பிப் 15, 2025 13:22

ஒரே தேர்தலில் வென்று, எம். எல். ஏ, ஆறு மாதத்தில் அமைச்சர், அடுத்த ஆண்டு துணை முதல்வர் என்று பதவிகளில் எகிறிக்கொண்டிருக்கும் வாரிசைப்பார்த்தும் , நேற்று மாற்றுக்கட்சியிலிருந்து வந்த கையோடு அமைச்சரான உங்களையும், செ . பா வையும் கண்டு 5/6 terms அமைச்சராகிய சீனியர்கள் யாருக்கும் ஆதங்கமோ, விரக்தியோ, வயிற்றெரிச்சலோ இல்லையென்று சொல்வீர்களா?


Sridhar
பிப் 15, 2025 12:38

உலக்கை ராஜ்யசபா போகப்போவதை இப்போது நினைத்தாலே கொலநடுங்குது பாவம் டங்கரும் மற்ற உறுப்பினர்களும் எப்படி சமாளிக்க போகிறார்க்ளோ? ஜூலைக்கு அப்புறம் அங்கெ ஒரு மசோதாவும் பாஸ் ஆவாது ஏன்னா ஒவ்வொருத்தனும் மண்டைய பிச்சிட்டு திரியப்போறாங்க


Kjp
பிப் 15, 2025 10:51

ரகுபதி பற்றி டவுட் தனபாலின் கருத்து சூப்பர்.தன் நிலை மறந்த ரகுபதி.நன்றாக ஜால்ரா அடிப்பதில் வல்லவர்.


vbs manian
பிப் 15, 2025 09:51

இவர் நம்பாத கடவுள்தான் இவருக்கு தெளிந்த புத்தியை கொடுக்க வேண்டும். தெரிந்தே பாழ் கிணற்றில் குதிக்கிறார்.


Bharathi
பிப் 15, 2025 09:08

கமல் கட்சியா? அப்படின்னு ஒண்ணு இருக்கா? திருட்டு தீயமுகாவுக்கு சொந்த செலவுல உதவி செய்த போது இல்லாத ரோஷம் இப்ப எங்க வர போகுது


HoneyBee
பிப் 15, 2025 09:47

அறிவாலய வாசலில் பிச்சை கேட்டு ஒருஆள் இருந்தான்..ஓ அவன் தான் இந்த காமஹாசனா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை