உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார்: தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தைப் பிடிக்க மஹாராஷ்டிரா மாநிலத்துடனும், படிப்பறிவில் முதல்இடத்தை பிடிக்க கேரளா மாநிலத்துடனும் போட்டி போடுகிறது. அதே போல, ஜாதிய வன்கொடுமையில் முதலிடத்தை பிடிக்க, உத்தர பிரதேசத்தோடு போட்டி போடுவது தான் வேதனை அளிக்கிறது. டவுட் தனபாலு: 'ஜாதி ஒழிப்புக்காக, ஈ.வெ.ரா., போராடியதால், சமூக நீதி கிடைச்சது'ன்னு திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பெருமை அடிச்சுக்கிறாங்களே... ஆனா, அதெல்லாம் மாயை என்ற சீமானின் கருத்தை இவரும் வழிமொழிகிறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடு பாடத் திட்டத்திற்காக, மத்திய அரசு வழங்கிய, 1,050 கோடி ரூபாய் எங்கே சென்றது... அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், எத்தனை தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் உள்ளன; ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப்பாடமாக ஏன் அமைக்கப்படவில்லை என்பது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், மக்களுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறார். டவுட் தனபாலு: 'இந்த வருஷம் ஏன் நிதி ஒதுக்கலை'ன்னு கேட்டால், அதுக்கு மட்டும் பதில் தரணும்... அதை விட்டுட்டு, 'ஏற்கனவே தந்த திட்டங்களுக்கான நிதி எங்கே போச்சு'ன்னு கேட்டால், தமிழக அரசிடம் தெளிவான பதில் கிடைக்குமா என்பது, 'டவுட்' தான்!அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: வேலியே பயிரை மேய்ந்தது போல, மாணவியர் பலர், ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும், பாலியல் குற்றங்களை ஒடுக்க வேண்டிய காவல் துறையிலேயே ஒரு, ஐ.பி.எஸ்., அதிகாரியால், பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதும் வெட்கக்கேடானது. இதற்காக, முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்தால் தான், தமிழகம் மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறும். டவுட் தனபாலு: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளை, ஆறே மாதங்களில் விசாரித்து முடித்து, டிஸ்மிஸ், கடுங்காவல் சிறை தண்டனை விதித்தால் தான், குற்றங்கள் குறையும்... அதற்கு, திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது, 'டவுட்' தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V வைகுண்டேஸ்வரன்,chennai
பிப் 17, 2025 20:01

கட்ட பஞ்சாயத்து, நாடக காதல் இதிலும் தமிழகம் முதலிடம்


D.Ambujavalli
பிப் 17, 2025 06:48

உங்களுக்கு- பாதுகாப்புக்குவந்த பெண் போலீஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை கொடுத்த வரலாறு மறந்துவிட்டதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை